சினிமா

ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா.. என்ன தெரியுமா.?

Published

on

ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா.. என்ன தெரியுமா.?

தமிழ் திரையுலகம் மற்றும் டெலிவிஷன் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மரணம். தன்னுடைய தனித்துவமான காமெடி டைமிங், உடல் அசைவுகள் மற்றும் எளிமையான பேச்சு மூலம் ரசிகர்களின் இதயத்தில் நிலையான இடத்தைப் பிடித்த அவர், கடந்த மாதம் உடல் நலக் குறைவால் காலமானார்.ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர், குறிப்பாக மனைவி பிரியங்கா, பெரும் மன உளைச்சலில் இருந்தார். சமூக ஊடகங்களில் ரோபோ சங்கருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் இன்னும் அந்த துயரத்தை மறக்கவில்லை.ஆனால், தற்போது பிரியங்கா தன்னுடைய வாழ்க்கையில் புதிய துவக்கத்தை எடுத்திருக்கிறார். அது என்னவென்றால், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சமீபத்தில் “ருசி நேரம்” என்ற யூடியூப் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது சமையல் திறமையை ரசிகர்களுடன் பகிர்ந்து வரவுள்ளார். இத்தகவல்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version