பொழுதுபோக்கு
விசாரணை வட்டத்தில் ரங்கராஜ், ஆண் குழந்தைக்கு தாயான ஜாய் கிரிசில்டா; லேட்டஸ்ட் அப்டேட்!
விசாரணை வட்டத்தில் ரங்கராஜ், ஆண் குழந்தைக்கு தாயான ஜாய் கிரிசில்டா; லேட்டஸ்ட் அப்டேட்!
தன்னை காதலித்து திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு தன்னுடன் வாழ மறுப்பதாக புகார் அளித்துள்ள பிரபல காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இது குறித்து அவரே தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், தனது காஸ்டியூம் டிசைனராக ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் வெளியானது, இது குறித்து இவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜூவுடன் திருமணமான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையின் பெயர் ராஹா ரங்கராஜ் என்றும் கூறிய நிலையில், திருமண புகைப்படம் வெளியிட்ட சில வாரங்களில் ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுக்கிறார் என்றும், தன்னைபோல் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்றும் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். அன்றுமுதல் இந்த விவகாரம் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன். எனக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆனால் அதற்கு ரங்கராஜஜ் தான் பொறுப்பு என்றும் கூறியிருந்தார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமீபத்தில் கிரிசில்டா தனது வழக்கறிஞருடன், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ6.5 லட்சம் வழங்க மாதம்பட்டி ரங்கராஜ்க்கு உத்தரவிடக் கோரி கிரிசில்டா மனுத்தாக்கல் செய்திருந்தார். A post shared by J Joy (@joycrizildaa)இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கிரிசில்டா எங்களுக்கும், மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறி தங்கள் திருமண போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.