பொழுதுபோக்கு
விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’… ஒர்த்தா? இல்லையா? விமர்சனம் இதோ
விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’… ஒர்த்தா? இல்லையா? விமர்சனம் இதோ
இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்யன்’. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ஆர்யன்’ திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.’எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.விமர்சனம்நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெண் நிருபராக உள்ளார். இவர் தொகுத்து வழங்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செல்வரகவன் கலந்து கொள்கிறார். தனிமையில் வாழும் தோல்வியடைந்த எழுத்தாளரான செல்வராகவன் திடீரென துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைய கைதிகளாக பிடித்து வைத்து அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து பேரை கொலை செய்யப்போகிறேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று மிரட்டல் விடுகிறார். சொன்னபடியே முதல் கொலையே தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து தொடங்குகிறார். ஒவ்வொரு நாளும் கொலைகள் அரங்கேறத் தொடங்கி பயம் மேலோங்குகிறது. இந்த தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் தலைமையில் காவல்துறை ஒரு குழுவை அமைக்கிறது. கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாததால் விஷ்ணு விஷால் தவிக்கிறார். இறுதியில் விஷ்ணு விஷால் கொலைகளை தடுத்தாரா? செல்வராகவன் கொலையின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பாதிப்புகளை பிரதிபலிக்கும் இடங்களில் முதிர்ச்சியான நடிப்பில் கைதட்டல் பெறுகிறார். சைக்கோ கொலையாளியாக வரும் செல்வராகவன் தோற்றத்தில் பயமுறுத்தவில்லை என்றாலும், செய்யும் கொலைகளில் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். செல்வராகவனின் பின்னணி தெரியும் வரை அவரது கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மானசா. கருணாகரன், அவினாஷ் என அனைவருமே கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப பயணித்துள்ளார்கள். இறுதிவரை படத்தின் பரப்பரப்பு குறையாமல் எடுத்துச் சென்றுள்ளனர் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனும், இசையமைப்பாளர் ஜிப்ரானும். படத்தின் கதை விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் உள்ள லாஜிக் மீறல்கள் சில இடத்தில் படத்தை தொய்வடைய செய்துள்ளது.