இலங்கை

அலட்சியம் வேண்டாம்; உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பை காட்டும் அறிகுறிகள்!

Published

on

அலட்சியம் வேண்டாம்; உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பை காட்டும் அறிகுறிகள்!

  உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது சில உடல் உறுப்புகளே அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரிக்கும்.

தற்போதைய கால கட்டத்தில் இளையோர் முதியோர் என பாகுபாடில்லாமல் பலரும் நோயால் அவதிப்படுகின்றனர்.

Advertisement

உடலுக்கு கொழுப்பு அவசியம் தான். ஆனால் அதன் அளவு அதிகரிப்பது மிக மிக ஆபத்தானது.

குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100-க்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டும்போது மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

Advertisement

கால் வலி

உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்பட தொடங்கும். இதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

அதன் தாக்கமாக நடக்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும்.

Advertisement


மார்பு வலி

மார்பு வலியையோ அல்லது அழுத்தத்தையோ உணர்வதும் கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இதய தமனிகளில் கொழுப்பு குவிவது மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மார்பில் இறுக்கமோ, எரிச்சலோ உண்டாகக்கூடும். அத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு அல்லது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Advertisement

கழுத்து, தாடை, தோள்பட்டையில் வலி

கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும். ஏனெனில் கொழுப்பு அதிகரிக்கும் போது, முழு உடலின் ரத்த ஓட்டமும் தடைபட தொடங்கும்.

Advertisement

இதன் காரணமாக கழுத்தைச் சுற்றி மட்டுமின்றி தாடை மற்றும் தோள்பட்டைகளில் அசாதாரண வலியை உணரலாம்.

உணர்வின்மை

Advertisement

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது,​ கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம்.

உடலில் கொழுப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக, கால்களின் நிறம் மாறக்கூடும். சில சமயங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக்கூடும்.

 தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்றல் ஆகியவை கொழுப்பு அதிகரித்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

Advertisement

மருத்துவ பரிசோதனை அவசியம்

படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் அல்லது சோர்வாக உணருதல், அதிகரித்த கொழுப்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.

அதுமட்டுமல்லாது கண்களைச் சுற்றி மஞ்சள் அல்லது மஞ்சள் வளையம் தோன்றக்கூடும்.

Advertisement

எனவே உடலில் இதுபோன்ற மாற்றங்களை கண்டால், அதலனை அலட்சியம் செய்யாது இதுபோன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அது கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ மேற்கொள்வது அவசியமாகும்.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version