சினிமா
ஆதி குணசேகரன் பற்றி அம்பலமாகும் ரகசியங்கள்.? ஜனனியை எச்சரித்த சக்தி.! டுடே ரிவ்யூ
ஆதி குணசேகரன் பற்றி அம்பலமாகும் ரகசியங்கள்.? ஜனனியை எச்சரித்த சக்தி.! டுடே ரிவ்யூ
எதிர்நீச்சல் தொடரின் சமீபத்திய எபிசோடுகளில், ஆதி குணசேகரனின் ரூமிலிருந்து எடுத்த லெட்டரை வைத்து, அதை எழுதிய தேவகி யார் என்பது குறித்து சக்தி இராமேஸ்வரம் கிளம்பி விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை தகவல் ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துள்ளது. சக்தியை தன்னுடைய அடியாட்களில் ஒருவரால் பாலோ பண்ணவும், அவன் ஏதேனும் எல்லைமீறி சென்றால் அவன் கதையை முடிச்சிடு என்றும் ஆதி குணசேகரன் சொல்லி உள்ளார்.இந்த நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். அதில், சக்தி இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு ரிட்டயர்டு போஸ்ட் மேனை சந்தித்து, அந்த லெட்டரை எழுதியவர் தேவகி என்று உறுதி பெறுகிறார். மேலும் அவர் ஒரு வட நாட்டு பெண் என்று தேவகியை தேடி கிளம்பிய அவர், ஜனனியிடமிருந்து அஸ்வின் வீடு பற்றிய தகவலை பெறுகிறார். ஆனால் குணசேகரன் மட்டுமல்லாமல் பலர் இதில் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.மேலும் போன் பண்ணிய ஜனனி, இங்கு எதுவும் கிடைக்கவில்லை, ஆனா இன்னைக்கு நம்ம வீட்டிற்கு பிசினஸ் பேச வந்த ஆளுக்கும், முகமே காட்டாத மூன்றாவது நபர், இவை எல்லாத்துக்கும் பின்னாடி அந்த குணசேகரன் மட்டுமில்லை என தோணுது. மேலும், வேற யார்கிட்டயாவது குணசேகரன் சம்பந்தப்பட்ட வீடியோ இருக்கான்னு கனெக்ட் பண்ணி பார்க்கும்போது ஒன்னு மட்டும் தான் இடிக்குது. இப்போ என் கையில ஒரு விசிட்டிங் கார்டு இருக்கு. நான் அங்க போய் விசாரிச்சுட்டு வருவதாக ஜனனி சொல்ல, அவரை கவனமாக இருக்குமாறும், உன்னோட பெயர் எங்கும் சொல்லக்கூடாது எனவும் சக்தி எச்சரிக்கிறார். இன்னொரு பக்கம் சக்தி போஸ்ட் மாஸ்டர் வீட்டுக்கு விசாரிக்க போன விஷயம் ஆதி குணசேகருக்கு தெரிய வருகிறது. இதனால் அவனை அங்கேயே முடிச்சு விடுமாறு உத்தரவிடுகின்றார். அதன்பின் சக்தியின் கதையை முடிக்க முடிவெடுத்து அவரை பாலோ செய்கின்றார்கள். எனவே கடற்கரையில் தனியாக காத்து வாங்கும் சக்தியின் கதை முடிந்ததா? ஆதியின் பேச்சைக் கேட்டு சக்தியை கொன்றார்களா? இல்லை சக்தி தப்பித்தாரா?தேவகியை கண்டுபிடித்தாரா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.