சினிமா
இந்த சீசன் ஒரு சூனியம்; நாங்க நடுங்கிட்டு இருந்தோம்.! பிரவீனை நோஸ் கட் பண்ணிய தாமரை
இந்த சீசன் ஒரு சூனியம்; நாங்க நடுங்கிட்டு இருந்தோம்.! பிரவீனை நோஸ் கட் பண்ணிய தாமரை
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இதன் ஆரம்பத்தில் 20 பேர் போட்டியாளர்களாக நுழைந்தனர். அதன் பிறகு நந்தினி, பிரவீன் காந்தி, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் வெளியேறி உள்ளனர். நாளாந்தம் புது புது பிரச்சனைகள் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் போட்டியாளர்களின் உண்மை முகங்களை இந்த சீசன் வெளிக்கொணறுகின்றது. அதே நேரம் இந்த சீசன் தொடர்பிலான விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமும் தயாரிப்பாளருமான ரவீந்திரன் தாமரையுடன் இணைந்து பிரவீன் காந்தியை பேட்டி எடுத்துள்ளார். தற்பொழுது அது தொடர்பான கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.அதன்படி பிரவீன் காந்தி கூறுகையில், பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட ரவீந்திரன் வெளியே அனுப்பப்பட்டதால் தான் அந்த சீசன் கவனிக்கப்பட்டது. இந்த சீசன் பிரவீன் காந்தியை வெளியே அனுப்பினதால் தான் கவனிக்கப்பட்டது . இவ்வாறு பிரவீன் காந்தி சொன்னதும் தாமரை விழுந்து விழுந்து சிரிக்கின்றார். மேலும் அந்த நேரத்தில் தாமரையும், இந்த சீசன் ஒரு சூனியம் போல தெரிகின்றது. உண்மையிலே நான் ரொம்ப பயப்பட்டேன். கலை என்ன பண்ணப் போறாரோ என்ற பயம் பயங்கரமா இருந்துச்சு. நாங்க எல்லாம் கமல் சார் வரும்போது நடுங்கிட்டு உட்காருவோம்.. ஆனால் இவங்க எல்லாம் அசால்ட்டா இருக்காங்க என்றார்.பிரவீன் காந்தியும், இந்த சீசன்ல வாட்டர் மெலன் ரொம்ப fanனா இருக்கின்றார். அவர் சட்டையை கழட்டி, துள்ளி குதிச்சு அலப்பறை பண்ணிட்டு இருப்பார் ஆனா 19 பேர் அங்க இருக்கிறது நியாயமா? அவங்கள வெளியே அனுப்பனும் என்றார்.