சினிமா
இப்படி கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்ப்பது…. போட்டியாளர்களை எச்சரித்த சேதுபதி
இப்படி கத்திக்கிட்டே இருந்தா எப்படி ஷோ பார்ப்பது…. போட்டியாளர்களை எச்சரித்த சேதுபதி
தமிழ் தொலைக்காட்சி உலகில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது “பிக் பாஸ்” தான். பல ஆண்டுகளாக பல்வேறு சீசன்கள் ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி வந்தாலும், தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 மீது ரசிகர்களிடையே எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன.இம்முறை பிக் பாஸ் சீசனுக்கு தொடக்கத்தில் இருந்து ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே ரசிகர்களிடமிருந்து “இந்த சீசன் சுவாரஸ்யம் குறைவாக இருக்கிறது”, “எப்போதும் சண்டை தான்” என்ற விமர்சனங்கள் குவிந்தன.இந்த சீசனில் போட்டியாளர்கள் பெரும்பாலும் சண்டை, கத்தல், கூச்சல் என ஒருவருக்கொருவர் அடிக்கடி மோதிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் “இந்த சீசனில் ஒரே சண்டை தான்…” என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலைமைக்கு மத்தியில் இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசொட்டில் நடுவர் விஜய் சேதுபதி கடும் கோபத்தில் போட்டியாளர்களை கண்டித்தார்.அவர் கையில் ஸ்பீக்கர் வைத்து கத்திக்கொண்டிருக்கும் போட்டியாளர்களை பார்த்து, “நீங்க கத்திக்கிட்டே இருந்தா எப்படி இந்த ஷோவை பார்ப்பது?” என கடுமையாக கேட்டுள்ளார். அவரது அந்த குரல் நொடியில், வீட்டில் இருந்த அனைவரையும் அமைதியாக்கியுள்ளது.