பொழுதுபோக்கு

இப்போ என்ன சாதிப்படம், நான் அப்போவே சாதிய படம் எடுத்தவன்; ஒரு நடிகருக்கு பட்டம் கிடைத்த வரலாறு சொன்ன பாக்யராஜ்!

Published

on

இப்போ என்ன சாதிப்படம், நான் அப்போவே சாதிய படம் எடுத்தவன்; ஒரு நடிகருக்கு பட்டம் கிடைத்த வரலாறு சொன்ன பாக்யராஜ்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், ‘புதிய வார்ப்புகள்’ என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும், இயல்பான நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ். இவரது திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு இவரது தனித்துவமான திரைக்கதை உத்தியே காரணம். அப்படி 100 நாட்கள் கடந்து ஓடிய திரைப்படம் தான் ‘ஒரு கை ஓசை’. கடந்த 1980-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ், இயக்கி தயரித்து நடித்த திரைப்படம் தான் ‘ஒரு கை ஓசை’.  சிறு வயதில் தன் தாயின் இறப்பை கண்முன்னே பார்ததால் நடிகர் பாக்யராஜ் ஊமையாகிவிடுவார். வாழ்க்கை வெறுத்து தற்கொலைக்கு முயலும் போதுதான் பாக்யராஜுக்கு மருத்துவர் அஸ்வினி அறிமுகமாவார். இவர்கள் முதலில் நட்பாக பழகி பின்பு அந்த நட்பு காதலாக மாறும். இதை பாக்யராஜ், அஸ்வினியிடம் கூறும் பொழுது அஸ்வினி தனக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாக கூறுவார். இறுதியில் என்ன நடந்தது என்பது தான் கதை.இந்த படத்தில் பாக்யராஜ், சாதி குறித்து பேசியிருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்ப எடுக்கும் சாதி படத்தை தான் அப்பவே எடுத்ததாக இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் பேசியதவது, ”இன்றைய இயக்குநர்கள் சாதி குறித்து என்ன சொல்கிறார்களோ அதை ‘ஒரு கை ஓசை’ படத்தில் மிகவும் சீரியஸாக சொல்லியிருப்பேன். சங்கிலி முருகன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பேன். அந்த நடிகரின் பெயர் முருகன் தான். சங்கிலி முருகன் கதாபாத்திரத்தில் நடித்ததால் இன்று வரை சங்கிலி முருகன் என்று தான் அழைக்கிறார்கள். அந்த படத்தில் சங்கிலி முருகன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். எல்லோரும் டீ குடிக்கும் இடத்தில் அமர்ந்து அவர்கள் டீ குடிக்க முடியாது. வெளியில் அமர்ந்து தான் டீ குடிக்க வேண்டும்.அவர்களுக்கு ஒரு புனலில் டீயை ஊற்றுவார்கள். சங்கிலி முருகன் தான் ஊருக்கே காவலாளியாக இருப்பார். ஒரு வன்மத்தில் பக்கத்து ஊர் மக்கள் பால் டாயில் ஊற்றப் போகும் பொழுது சங்கிலி முருகன் தான் சண்டை போட்டு ஊர் மக்களை காப்பாற்றுவார். அப்போது கத்திக் குத்துப்பட்டு சங்கிலி முருகன் சாகும் நிலையில் இருக்கும் பொழுது ஊர் மக்கள் உனக்கு என்ன கைமாறு செய்யபோறோம் என்று கேட்பார்கள். அதற்கு சங்கிலி முருகன் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்… எங்களையும் மனிதாக மதித்து நீங்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்து நீங்கள் குடிக்கும் டம்ளரில் டீ கொடுங்க. எங்களையும் மனுஷனா மதியுங்க என்று கூறுவார்” என்றார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version