இலங்கை
உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் சந்திரிக்கா பண்டாரநாயக்க!
உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் சந்திரிக்கா பண்டாரநாயக்க!
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற தனது பொருட்களை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் நீக்கச் சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நவம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தார்.
ஆனால், அவர் தற்போது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்காக தனது பொருட்களை தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை