சினிமா
என்னை போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!! மனைவி ஷாலினி பற்றி பேசிய அஜித்..
என்னை போன்றவனுடன் வாழ்வது எளிதல்ல!! மனைவி ஷாலினி பற்றி பேசிய அஜித்..
நடிகர் அஜித்தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரனும் மீண்டும் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வரும் அஜித், சமீபகாலமாக பேட்டிகள் அளித்த பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.தனது கடினமான பயணத்தில் மனைவி ஷலினியின் பங்களிப்பு பற்றி அஜித் பேசிய விஷயம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதில், நான் ஷாலினிக்கு கடமைப்பட்டுள்ளேன். ரேஸிங்கில் பங்கேற்கிறேன், சண்டை காட்சிகளில் நானே நடிக்கிறே, என்னைப் போன்றவனுடன் வாழ்வது சாதாரண விஷயம் இல்லை, ஆனால் ஷாலினி எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.இவையெல்லாம் அவரின் துணையின்றி சாத்தியமாகி இருக்காது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் அஜித் குமார்.