இலங்கை

ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Published

on

ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்களின் வசதிக்காகவும், அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது.

தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தச் சட்டம் மூலம் கீழ்க்கண்ட விடயங்களைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Advertisement

அபராதம் மற்றும் அபராதம் அறவிடும் பொறிமுறையை மேலும் வினைத்திறன்மிக்க நிலைக்குக் கொண்டு வருதல்.

வர்த்தக வங்கிகளுக்குப் பதிலாக, ஊழியர் சேமலாப நிதியம் ஊடாக அதன் உறுப்பினர்களுக்குக் கடனுதவி வசதிகளை வழங்குதல் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் தற்போதுள்ள சமத்துவமின்மையை நீக்குதல்.

இது தொடர்பாக நேற்று (30) தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

இதில் தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், முதலாளிகளிடமிருந்து அபராதம் அறவிடும் பொறிமுறையானது சிக்கலற்றதாக இருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் உரிய அபராதங்களை துரிதமாக அறவிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

அப்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான நம்பிக்கையை வைத்திருக்க முடியும் என்று தெரிவித்தார்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version