உலகம்

கரீபியன், கிழக்கு பசிபிக் பெருங்கடல்களின் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!

Published

on

கரீபியன், கிழக்கு பசிபிக் பெருங்கடல்களின் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்!

கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல்களில் அமெரிக்கப் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 62க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் 15க்கும் மேற்பட்ட கப்பல்களை அழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் எந்தவொரு  ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்நிலையில், ட்ரென் டி அரகுவா போன்ற வெனிசுலா குற்றக் கும்பல்களை குறிவைத்து நடத்தப்படும் பரந்த போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் இந்த கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவற்றை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியுள்ளார். அதேவேளை, வெனிசுலாவை தாக்குவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அறிவித்துள்ள போதிலும் இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் வெனிசுலா கடற்கரைக்கு அருகே ஒரு பெரிய அமெரிக்க இராணுவபடை  குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கடுகின்றது.

இது அமெரிக்கா வெனிசுலா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல்களை மேற்கொள்ள தயாராக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதேநேரம், வெனிசுலாவின் அரச தரப்பில் இருந்தும் தாங்கள் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை போர் பதற்றத்தை அதிகரிப்பதை காட்டுவசதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version