இலங்கை
கல்லால் தாக்கப்பட்டு பெண் கொடூரமாக கொலை!
கல்லால் தாக்கப்பட்டு பெண் கொடூரமாக கொலை!
காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாத்தேகம பகுதியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அஹுங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் குறித்த கொலைக்குரிய சந்தேக நபரான உறவினர், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.