பொழுதுபோக்கு

காஸ்லி புடவையில் விழுந்த 2 சொட்டு காபி; மறுநாளே எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி; சரோஜா தேவி சொன்ன சம்பவம்!

Published

on

காஸ்லி புடவையில் விழுந்த 2 சொட்டு காபி; மறுநாளே எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி; சரோஜா தேவி சொன்ன சம்பவம்!

அந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என கொடிகட்டிப் பறந்த நிறுவனங்களில் விஜயா வாஹினி ஸ்டூடியோவும் ஒன்று. நாகிரெட்டி திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர். இவர் என்.டி.ஆரை வைத்து எடுத்த ‘ராமுடு பீமுடு’ என்கிற படம் ஆந்திரத்தின் மூலை முடுக்கு எங்கும் என்.டி.ஆரை கொண்டு போய் சேர்த்தது. இந்த படத்தை தமிழிலும் எடுக்கலாம் என்று விஜயா  புரொடக்‌ஷன் முடிவு செய்தது.அந்த காலத்தில் தெலுங்கில் வெளியாகும் படக்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. அந்த வகையில் ‘ராமுடு பீமுடு’ திரைப்படம் ‘எங்கவீட்டு பிள்ளை’ என்று ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் யார் கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என எந்த டிஸ்கஸனும் இல்லாமல் எம்.ஜி.ஆரை தயாரிப்பு நிறுவனம் தேர்ந்தெடுத்தது. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக யாரை போடலாம் என்ற போது நடிகை சரோஜா தேவி பொருத்தமாக இருப்பார் என்ற நாகிரெட்டி அவரது வீட்டிற்கே சென்று பேசி நடிக்க சம்மதம் வாக்கி வந்துள்ளார்.படம் குறித்த அறிவிப்பு வந்ததுமே எம்.ஜி.ஆர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள்.’நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. இந்த படம் எம்.ஜி.ஆருக்கும் புது வித அனுபவத்தை கொடுத்தது. ‘எங்க வீட்டு பிள்ளை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரையும் இப்படம் அழியா காவியமாக உள்ளது.இந்நிலையில், ‘எங்க வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சரோஜா தேவி புடவையில் காபி சிந்திய நிலையில் மறுநாளே எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்து நடிகர் மனோபாலா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்’ பாடலின் போது நல்ல விலையுயர்ந்த புடவை எல்லாம் கட்டிக் கொண்டு சரோஜா தேவி இருப்பார். அந்த பாடலின் ஒரு சிறிய இடைவெளியின் போது காபி கொண்டு வந்து நடிகை சரோஜா தேவிக்கு கொடுத்திருக்கிறார்கள். அப்போது ஒரு இரண்டு, மூன்று சொட்டு காபி புடவையில் சிந்திவிட்டது. இதை பார்த்த எம்.ஜி.ஆர் இரவோடு இரவாக வெள்ளியில் ட்ரா வைத்து மூடிபோட்டு இருக்கும் டம்ளரை ஆடர் செய்து அடுத்த நாள் படப்பிடிப்பின் போது நடிகை சரோஜா தேவிக்கு பரிசளித்துள்ளார். வெறும் டம்ளர் மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்காது என்று ஒரு சின்ன வெள்ளி பிளேட்டும் பரிசளித்துள்ளார். இதனை ‘ஆதவன்’ படப்பிடிப்புன் போது சரோஜா தேவி எனக்கு காண்பித்தார்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version