இலங்கை

கெஹெல்பத்தர பத்மே வழக்கு தொடர்பில் 5 நடிகைகளிடம் விசாரணை

Published

on

கெஹெல்பத்தர பத்மே வழக்கு தொடர்பில் 5 நடிகைகளிடம் விசாரணை

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, அத்திணைக்களம் இன்று (31) நீதிமன்றத்தில் அறிவித்தது.

இந்த நடிகைகள் கெஹெல்பத்தர பத்மேயுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணச் சலவை அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நவம்பர் மாதம் 7ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version