சினிமா
ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்.. அச்சு அசல் அப்பாவின் முகம்.! கிரிஸில்டாவின் பதிவு படுவைரல்
ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்.. அச்சு அசல் அப்பாவின் முகம்.! கிரிஸில்டாவின் பதிவு படுவைரல்
தமிழகத்தில் சமையல் கலைஞராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகவும் அறியப்படும் மாதம்பட்டி ரங்கராஜ், சமீப காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார். குறிப்பாக, அவரது இரண்டாவது மனைவியாக கூறப்படும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வந்தன.இருவருக்கிடையேயான உறவு குறித்த பிரச்சனைகள் மாநில மகளிர் ஆணையத்தின் விசாரணை வரை சென்றுள்ள நிலையில், தற்போது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியான திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.சமீபத்தில், ஜாய் கிரிஸில்டா தன்னுடைய சமூக வலைத்தள கணக்கில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அவருக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரச்சனைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட விசாரணைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் பிறந்த இந்தக் குழந்தை, தற்போது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்து வருகிறது.இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், புதிதாக பிறந்த தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் எழுதியிருந்த வாசகம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பதிவில், ” அச்சு அசல் அப்பாவின் முகம்..ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ்.. ராகா ரங்கராஜ்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு வெளிவந்த சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான லைக்குகள், மற்றும் வாழ்த்துப் பதிவுகள் குவிந்துள்ளன.