சினிமா
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநரின் திருமண கொண்டாட்டம்! SK கொடுத்த காஸ்ட்லி கிப்ட்
‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநரின் திருமண கொண்டாட்டம்! SK கொடுத்த காஸ்ட்லி கிப்ட்
தமிழ் சினிமாவில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவந்த். இவர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுடைய திருமண வாழ்க்கை சிறக்க வேண்டும் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது . குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோவாகவும் நடிக்க முடிவெடுத்துள்ளார் அபிஷன்.இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கரன், ரமேஷ் திலக், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், அருண் விஷ்வா, சிம்ரன், சண்முகப்ரியன், மதன், மோகன்ராஜ் என்று பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில் அபிஷன் ஜீவிந்த் – அகிலாவின் திருமணத்துக்கு சென்ற சிவகார்த்திகேயன், விலை உயர்ந்த பரிசை கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதன்படி சிவகார்த்திகேயன் அபிஷன் ஜீவந்த்துக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த மனதை பார்த்து ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.