சினிமா

தமிழிலும் அர்ப்பணிப்பான நடிகைகள் இருக்கோம்.. மாரிசெல்வராஜை கேள்வியெழுப்பிய நடிகை

Published

on

தமிழிலும் அர்ப்பணிப்பான நடிகைகள் இருக்கோம்.. மாரிசெல்வராஜை கேள்வியெழுப்பிய நடிகை

தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு ஒன்று, இன்று சென்னையில் நடைபெற்ற “மதராஸ் மாஃபியா கம்பெனி” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பு குழுவினர்கள், நிரூபர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர். ஆனால், விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சி என்றால், நடிகை ஆராத்யா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய தருணம் தான்.ஆராத்யா, விழா மேடையில் நின்று, இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து தனது கேள்வியை எழுப்பியிருந்தார். அவர் தெரிவித்ததாவது, “தமிழிலும் அர்ப்பணிப்புடன் நடிக்கிற நடிகைகள் இருக்கிறோம், சார். நாங்களும் தமிழில் டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட் ஆகத் தான் இருக்கிறோம். எங்களால முடிஞ்ச effort போடுறோம். உங்கள் காதுகளுக்கு அது வந்து சேரல.” என்றார்.இந்த உரையாடல், தமிழ் திரையுலகில் நடிகர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு குறித்த விளக்கத்தை அளித்துள்ளது.நிகழ்ச்சியில் ஆராத்யா கூறிய குறிப்பு, இயக்குநர் மாரி செல்வராஜின் ஒரு முன்னாள் நேர்காணல் கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. அவர் அந்த நேர்காணலில், “டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்டை தான் நான் எடுப்பேன். அது மலையாளி என்றால் கூட பிரச்சினையில்ல…” எனத் தெரிவித்திருந்தார். இதனையே தற்பொழுது நடிகை ஆராத்யா விளக்கியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version