இலங்கை

பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை கோரும் 20 எம்பிக்கள்

Published

on

பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை கோரும் 20 எம்பிக்கள்

  தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் பிரதானிகளிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் அவர்கள் முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

எம்பிக்களின் இந்தக் கோரிக்கைகள் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பொலிஸ் மாஅதிபரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

Advertisement

எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போதைய அச்சுறுத்தல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்றின் பின்னரே, தகுதியானவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version