டி.வி
பிக் பாஸ்ல போட்டிபோட்டு வெளியே போனது யார் தெரியுமா? அவருக்கு இதுதான் லாஸ்ட் எச்சரிக்கை
பிக் பாஸ்ல போட்டிபோட்டு வெளியே போனது யார் தெரியுமா? அவருக்கு இதுதான் லாஸ்ட் எச்சரிக்கை
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் இன்னும் சில நாட்களில் ஒரு மாதத்தை எட்ட உள்ளது. இதனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி இதிலிருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து இருந்தன. இந்த வார நாமினேஷனில் 5 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர். அதில் கம்ருதீன், கலை, அரோரா, பார்வதி மற்றும் வினோத் ஆகியோர் காணப்படுகின்றார். அதில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று இறுதி நிலையில் அரோராவும் கலையரசனும் காணப்படுகின்றனர். கடந்த வாரம் வீட்டுக்குள் நடைபெற்ற வாக்குவாதங்கள் மற்றும் தனிப்பட்ட செய்கைகளின் அடிப்படையில் இந்த போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் கம்ருதீன் ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் தற்போது தனது நகைச்சுவை, நேர்மையான அணுகுமுறை மூலம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். இதனால் அவர் மக்களால் பாதுகாக்கப்பட்டார். ஆனாலும் அரோரா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே சர்ச்சைகளை கிளப்பி வருகின்றார். இவருடைய செய்கைகள் கோபம் தரும் வகையில் கலவையான எதிர்வினைகளை கொண்டுள்ளது. இவருக்கு நான்காவது இடம் வாக்குப்பதிவில் கிடைத்துள்ளது. இது அவருக்கு ஒரு எச்சரிக்கை சிக்கனலாகும். இவர் தனது கேம் ஸ்ட்ராட்டஜியை மாற்றவில்லை என்றால் அடுத்த வாரம் வெளியேற வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றவராக கலையரசன் காணப்படுகின்றார். வீட்டுக்குள் இவரின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. இவ்வாறான நிலையில் கலையரசன் எலிமினேட் செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது கம்ருதீன், வினோத் மற்றும் பார்வதி ஆகியோர் பாதுகாப்பான நிலையில் உள்ள போதும், அரோரா மற்றும் கலை ஆகியோர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். எனவே தற்போது கலை எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இன்றைய தினம் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நாலு பேர் செல்ல உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.