இலங்கை
புதுக்குடியிருப்பில் அழுகிய மரக்கறிகளை வைத்திருந்தமைக்கு 30,000 அபராதம்
புதுக்குடியிருப்பில் அழுகிய மரக்கறிகளை வைத்திருந்தமைக்கு 30,000 அபராதம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகரத்தை அண்டிய பிரபலமான ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ரூபா 30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்ரு (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, சமையலறையில் பழுதடைந்த மற்றும் அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகள் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த நிறுவனம் மீது 30,000 ரூபா அபராதம் விதித்தது.
அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் இடம்பெறாதவாறு எச்சரிக்கையுடன் விடுவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களான கோகுலன், பிரதாஸ் மற்றும் றொஜிஸ்ரன் உள்ளிட்டவர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.