இலங்கை

பெலாரஸ் எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

Published

on

பெலாரஸ் எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் பெலாரஸ் எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 

Advertisement

அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 பெலாரஸ்யஎல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்துள்ளனர். 

Advertisement

 இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version