பொழுதுபோக்கு

முதுகில் குத்தி கொன்னுட்டாங்க, காயம், ரத்தம், வடு அதிகமா இருக்கு; நடிகர் ஆனந்தராஜ் உருக்கம்!

Published

on

முதுகில் குத்தி கொன்னுட்டாங்க, காயம், ரத்தம், வடு அதிகமா இருக்கு; நடிகர் ஆனந்தராஜ் உருக்கம்!

தமிழ் சினிமாவில் காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஆனந்த்ராஜ், 80-களில் இறுதியில் தனது பயணத்தை தொடங்கி இன்றுவரை முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார், இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, தனது முதுகில் குத்திய நபர்கள் குறித்து பட விழா ஒன்றில் கண்ணீர் மல்க பேசியுள்ளார், பல படங்களில் வில்லன், சில படங்களில் ஹீரோ என்று நடித்து வந்த ஆனந்த்ராஜ், சமீப காலமாக காமெடி வில்லன் கேரக்டரில் அசத்தி வருகிறார். இவர் மீண்டும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள படம் தான் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், நான் இன்றைக்கும் நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணம், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் இருவரும் தான். இவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். அவர்களது முதல் படங்களில் நான் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். ஆர்.வி.உதயகுமாருடன் உறுதிமொழி, ஆர்.கே.செல்வமணியுடன் புலன்விசாரணை, அடிமைச்சங்கிலி உள்ளிட்ட சில படங்கள் என இவர்களின் படங்களில் நடித்தபோது பலவற்றை கற்றுக்கொண்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நான் உட்பட எல்லோரும் நடிக்க வந்தோம். பணம் சம்பாதிப்பது வேற விஷயம். ஓரளவுக்கு பணம் முக்கியம் தான். ஆனால் அளவுக்கு அதிகமாக பணம் இருந்தால் பணத்திற்கு தான் மதிப்பு நமக்கு மதிப்பு இருக்காது. மகிழ்ச்சி போய்விடும். நாம் சொல்வதை பணம் கேட்க வேண்டும். பணம் சொல்வதை நாம் கேட்கும் நிலை வர கூடாது. இதை ரஜினி மாதிரி ஒரு நடிகர் சொன்னால் கேட்பீர்கள். நான் சொன்ன கேட்பீர்களா என்று தெரியவில்லை. எது முக்கியமோ அதுதான் முக்கியம். ஒரு பெரிய நடிகர், ஒவ்வொரு கல்லும் நானா செதுக்கியது என்று சொல்லும்போது ரசிக்கிறோம். நாங்களும் அப்படித்தான். எங்களுக்கு எந்த பின்புலமும் கிடையாது. நான் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உல்லோரும் பின்புலம் இல்லாமல் போராடி மேலே வந்தோம். நான் நடிக்கும்போது எனக்கு ஒரு சின்ன பயம் இருக்கும். என்னை விட அதிகமாக நேசித்தவர் எனது தகப்பனார். நான் ஒருமுறை ஷூட்டிங்கில் இருந்தபோது இரவு லேட் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் சீக்கிரமே முடிந்தது என்று சொல்லிவிட்டார்கள். அதன்பிறகு கிளம்பி வீட்டுக்கு போய்விட்டேன்.அடுத்து நான் வீட்டுக்கு வந்தவுடன் நாளைக்கும், அடுத்த நாளும் உங்க டேட் வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் சரி ஓ,கே தேங்க்யூ என்று சொன்னவுடன், அடுத்த நிமிடம் உங்க அப்பா தவறிவிட்டார் என்று போன் வருகிறது. அவரது சாவுக்கு போக வேண்டும் என்பதற்காகவே எனக்கு முன்கூட்டியே நாளை ப்ரீ செய்து கொடுத்ததுபோல் இருந்தது. நான் போய் எங்க அப்பா உடலை பார்த்து உங்க கூட இருக்க வேண்டும் என்று தான் எனக்கு ஷூட்டிங் ப்ரீ பண்ணி கொடுத்தீங்களா அப்பா என்று கேட்டேன். இதை ஒரு பெரிய நடிகர் சொன்னால் கேட்பார்கள். நான் ஒரு சராசரி நடிகன். இந்த மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தி்ற்கு என்னை தள்ளிவிட்டது யார்? முதுகு முழுவதும் காயம், ரத்தமாக, வடுக்கள் இருக்கிறது, என்னை முதுகில் குத்தி கொன்றுவிட்டார்கள். ஒரு படம் வீ்ட்டுக்கு வந்து பேசிவிட்டு போவார்கள். அத்துடன் முடிந்தது அதன்பிறகு அழைக்கமாட்டார்கள். இந்த படத்தில் நான் லீடு ரோல் பண்ணிருக்கேன். கதாநாயகன் அல்ல கதையின் நாயகன் அவ்வளவு தான். கலையை கலையாக பாருங்கள் இதுதான் என்று வேண்டுகோள் என்று ஆனந்தராஜ் உருக்கமாக பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version