இலங்கை

யாழில் காற்றில் பறந்ததா இளங்குமரன் எம்.பி வாக்குறுதி!

Published

on

யாழில் காற்றில் பறந்ததா இளங்குமரன் எம்.பி வாக்குறுதி!

    யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் எவ்வித தங்குதடையுமின்றி வன்முறை கும்பல்களினால் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடாரப்பு , செம்பியன்பற்று பகுதியில் இயற்கை சமநிலையை பேனுவதற்கான நிரந்தர மர நடுகை எனும் பெயரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

Advertisement

அப்பகுதியில் தற்போது பாரியளவு சட்ட விரோதமான மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் தாழையடி பிரதேசத்தில் இடம் பெரும் சட்ட விரோதமாக மண் அகழும் இடத்தில் இருந்து மருதங்கேணி பொலிஸ் நிலையம் சுமார் 1kM தூரத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதிக்கு நேரில் வந்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இவ் சட்ட விரோதமான மண் அகழ்வுகளுக்கு எதிராகவும் , அதில் ஈடுபடும் மண் மாஃபியாகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.

Advertisement

எனினும் இது வரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால் , தொடர்ந்தும் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version