இலங்கை

வாகன கொள்வனவு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய ரவி கருணாநாயக்க

Published

on

வாகன கொள்வனவு தொடர்பில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய ரவி கருணாநாயக்க

48.8 பில்லியன் ரூபாய் செலவில் அரசாங்கம் அதி சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரிய விலைமனு கோரல் இன்றி, 1,775 அதிசொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது, இது தொடர்பில், ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின், 2,000 வாகனங்கள் கொள்வனவு திட்டத்தில் 225 வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த வாகன கொள்வனவுக்காக அரசாங்கம் 42.8 பில்லியன் ரூபாயை செலவு செய்வது கவலையளிப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன், இந்த வாகனங்களை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

உள்ளூரில் கொள்வனவு செய்யும்போது ஒவ்வொரு வாகனத்துக்கும் சுமார் 16.5 மில்லியன் செலவாகும்.

ஆனால், அரசாங்கம் ஒவ்வொரு வாகனத்தையும் 24.5 மில்லியன் ரூபாய்க்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது.

Advertisement

இது ஒரு வாகனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வித்தியாசம் ஆகும்.

மூன்றில் ஒரு பங்கு என அவர் தெரிவித்தார்.

இந்த வாகனங்களை யார் வழங்கினாலும், அரசாங்கம் செய்வது தவறு என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், எரிபொருளில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் ரவி கருணாநாயக்க இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version