வணிகம்

Gold Rate Today, 01 நவம்பர்: மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிகரிப்பு… மக்கள் அதிர்ச்சி!

Published

on

Gold Rate Today, 01 நவம்பர்: மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிகரிப்பு… மக்கள் அதிர்ச்சி!

Gold Rate Today, 01 November: தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு, நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.குறிப்பாக, சென்ற மாதம் தொடக்கத்தில் சவரன் தங்கம் ரூ.73,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக.6-ம் தேதி ரூ.75,000-ஐ தாண்டியது. அதன்பிறகு 7-ம் தேதி ரூ.75,200 ஆகவும், அடுத்த நாள் ரூ.75,760 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.கடந்த வார திங்கட்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. செவ்வாய்கிழமை தங்கம் விலை ரூ.640 குறைந்திருந்தது. புதன்கிழமையும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.84,320க்கு விற்பனையானது. வியாழன் மற்றும் நேற்று விலை அதிகமாக விற்பனையானது.தங்கம் விலை: இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ. 90,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 11,310 -க்கும் விற்பனையாகிறது.24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 12,338 -க்கும், ஒரு சவரன் ரூ. 99,704 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 9,435-க்கும், ஒரு சவரன் ரூ. 75,480 – க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளி விலை: அதே நேரத்தில் சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 170 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,70,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று தங்கம்முதல் நாளே விலை அதிகரித்திருப்பது மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version