பொழுதுபோக்கு

உங்க அப்பா ஒண்ணும் இல்ல, ரஹ்மான் வந்துட்டாரு; யுவனிடம் சொன்ன நண்பர்கள்: கடைசில என்ன ஆச்சு தெரியுமா?

Published

on

உங்க அப்பா ஒண்ணும் இல்ல, ரஹ்மான் வந்துட்டாரு; யுவனிடம் சொன்ன நண்பர்கள்: கடைசில என்ன ஆச்சு தெரியுமா?

1997-ம் ஆண்டு சரத்குமார், பார்த்திபன் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து, ’வேலை’, ’கலாட்டா கல்யாணம்’, ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’உனக்காக எல்லாம் உனக்காக’ என 4 படங்களை கொடுத்த யுவன், 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படமும் பெரிய வெற்றியை பெற்றது.அதே ஆண்டு பாலாவின் பெரிய வெற்றிப்படமான ’நந்தா’ படத்திற்கு இசையமைத்த யுவன்சங்கர் ராஜா, ஏ.ஆர்,முருகதாஸ், அமீர், செல்வராகவன், விஷ்ணுவர்த்தன், உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களின் முதல் படத்திற்கு இசை அமைத்துள்ளார். அந்த படங்களின் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களை ‘டிரக்ஸ்’ போன்று ரசிகர்கள் புகழ்வது உண்டு. அதாவது இவரது பாடல்கள் எல்லா காலக்கட்டத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 100 படத்திற்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரிசையில் யுவன் சங்கர் ராஜாவும் இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் எப்படி இசையமைப்பாளரானேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ” என் நண்பர்கள் எல்லாம் இனி உங்க அப்பா இளையராஜாலாம் ஒன்றும் இல்லை. ரஹ்மான் என்ற புதிய இசையமைப்பாளர் வந்துவிட்டார் என்று கூறினார்கள். எனக்கு அது புதிதாக இருந்தது. நான் உடனே எங்கள் கார் ஓட்டுநரிடம் சொல்லி ஆடியோ கேசட் வாங்க சொல்லி அவரது பாடல்களை கேட்டேன். உண்மையாக நன்றாக இருந்தது. எனக்கு பைலட் ஆக வேண்டும் என்று ஆசை. அப்போது நான் அந்த பக்கம் போய்விட்டால் இந்த லெகசி என்ன ஆவது. அது என் தந்தையோடு முடிந்துவிடும். அது முடியக் கூடாது என்பதற்காக நான் இசையமைப்பாளர் ஆனேன். இதற்கு நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவரால் தான் நான் இசையமைப்பாளராகியுள்ளேன்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version