பொழுதுபோக்கு

அந்நியன் டூ அம்பி… கிரிஞ்ச் செய்யும் வியானா – விமர்சனங்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்

Published

on

அந்நியன் டூ அம்பி… கிரிஞ்ச் செய்யும் வியானா – விமர்சனங்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதள பிரபலங்கள் கலந்து கொண்டதால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும், 20 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே, ஆதிரை ஆகியோர் வீட்டை விட்டு வரிசையாக வெளியேறினர்.பிக்பாஸ் வீட்டில் எப்போதும் லவ் கன்டன்ட், அடல்ட் கன்டென்ட் எல்லாம் இருக்கும். ஆனால், இந்த சீசன் அவை மக்களை முகம் சுழிக்க வைக்கும் விதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் வீடு என்றாலே சண்டைகளும், சர்ச்சைகளும் தான் இருக்கும். ஆனால், இந்த சீசன் மக்கள் என்னடா இது இப்படியே பண்ணிட்டு இருக்கீங்க என்ற அளவுக்கு பிரச்சனைகள் வெடித்து வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்களே போதும் நிறுத்துங்கள் என்று சொல்லும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் வெடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முதல் காரணமே வி.ஜே.பார்வதி தான் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் சொல்வதை கேட்காமல் பிரச்சனை என்ற ஸ்டார்டஜி மூலம் பிக்பாஸ் வீட்டின் சூழலையே மாற்றி வருவதாக விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த போட்டியாளர் வியானா தற்போது தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். யார்ரா அந்த பையன் டாஸ்கில் வியானா மிகவும் தைரியமாக தனது கருத்துகளை பகிர்ந்தார். இதற்கு பிக்பாஸ் உட்பட பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் வீட்டிலேயே சிலர் வியானாவை பார்த்து கற்றுக்கொள் என்று கலையரசனிடம் அறிவுரை கூறினார்கள்.நேற்றைய (நவ. 2)  நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பிக்பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்கினார். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் வியானா செய்தது சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, விஜய் சேதுபதி, யார்ரா அந்த பையன் டாஸ்கில் வியானாவின் தைரியமாக பேசியது தொடர்பாக தனது பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது வியானா குழந்தை தனமாக பேசினார். மேலும், அந்த டாஸ்கில் யார் நல்லா விளையாடவில்லை என்று விஜய் சேதுபதி கேட்டதற்கு நான் மட்டும் தான் நல்லா விளையாடுனேன் என்று சொல்லிவிட்டு குழந்தை தனமாக சிரிப்பார்.BB team and vjs forcefully trying to convey audience #Viyana is good players 🥴 But people are very smart to reject her cringe 😂#BiggBossTamil9#BiggBossTamilSeason9#VijaySethupathipic.twitter.com/4hlcKwsVGhஇந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள் அந்நியன் டூ அம்பி.. என்னடா இது மூஞ்சி, ஹாசினி மாதிரி பண்றேனு கிரிஞ்ச் பண்ணுது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் கடந்த சீசன் செளந்தர்யா உடன் எல்லாம் வியானாவை கம்பேர் பண்ணாதீங்க என்று சொல்லி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version