உலகம்
இலங்கைக்கு வருகைதரவுள்ள வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்!
இலங்கைக்கு வருகைதரவுள்ள வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்!
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். அதுமட்டுமன்றி இவரது விஜயம் இலங்கை மற்றும் வத்திக்கான் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 50வது ஆண்டு நிறைவையொட்டியே இந்த விஜயம் அமைந்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரிலேயே வெளியுறவு அமைச்சர் பால் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.