பொழுதுபோக்கு
‘எம்.ஜி.ஆர் போல விஜய் கண்டிப்பாக’… ‘திருப்பாச்சி’ பட நடிகர் பெஞ்சமின் பேச்சு
‘எம்.ஜி.ஆர் போல விஜய் கண்டிப்பாக’… ‘திருப்பாச்சி’ பட நடிகர் பெஞ்சமின் பேச்சு
கோவையில் உள்ள ‘மை கராத்தே இண்டர்நேஷனல்’ பயிற்சி மையத்தின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான ‘நிகான் ஷோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப்’ போட்டி நடைபெற்றது. நிஹான் ஷோட்டோகான் கராத்தே சங்கத்தின் தமிழ்நாடு தலைமைப் பயிற்சியாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்க விழாவில், நடிகர் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்-வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.போட்டிகளைத் துவக்கிவைத்த பின், நடிகர் பெஞ்சமின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “உடல் ஆரோக்கியத்தை காப்பதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த கராத்தே போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ள குழந்தைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.திரைப்படத் துறையில் முன்னணி நடிகராக இருந்து, பல நூறு கோடி ரூபாய் வசூல் படங்களில் நடித்து வந்த விஜய், அரசியலில் ஈடுபட்டுள்ளதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். நான் அவருடன் ‘திருப்பாச்சி’ படத்தில் நடித்த நாட்களை நினைவுகூர்கிறேன்.சிறு குழந்தைகள் மனதில் இடம் பிடித்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் இருக்கிறார். அவர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்தான் தமிழகத்தில் முதல்வர் ஆகியுள்ளார்கள். இதற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை உதாரணமாகச் சுட்டிக் காட்டலாம். அந்த வரிசையில், நடிகர் விஜய் கண்டிப்பாக தமிழகத்தை ஆளப் போவது உறுதி,” என அவர் தெரிவித்தார்.செய்தி: பி.ரஹ்மான், கோவை