பொழுதுபோக்கு
கேரளாவை உலுக்கிய இரட்டை கொலை; கொலையாளி நண்பனே ஹீரோ, மோகன்லால் உச்சம் தொட்ட படம்!
கேரளாவை உலுக்கிய இரட்டை கொலை; கொலையாளி நண்பனே ஹீரோ, மோகன்லால் உச்சம் தொட்ட படம்!
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள், முற்றிலும் கற்பனை கதைகளை விட அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆரம்பத்திலேயே, கதை கற்பனைக்காக மாற்றப்பட்டிருக்கலாம் என்று தெளிவாக மறுப்புகள் மறுப்பு தெரிவித்தாலும், அத்தகைய படங்களின் மீது ரசகர்களுக்கு ஒரு தீவிர மோகம் உள்ளது. அந்த வகையில் மற்ற சினிமா துறைகளைப் போலவே, மலையாளத் திரையுலகமும் உண்மைக் குற்றச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:சுவாரஸ்யமாக, பிற்காலத்தில், அத்துறையின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகவும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றவராகவும் உயர்ந்த மோகன்லால், தனது ஆரம்ப காலத்திலேயே அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்திருந்தார். உண்மையில், அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், அவர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியப் பங்காற்றியது.மதராசிலே மோன்: மோகன்லாலின் ஆரம்ப கால வெற்றி’மதராசிலே மோன்’ (Madrasile Mon) என்ற தலைப்பைக் கொண்ட அந்த க்ரைம் திரைப்படத்தை, “ஹிட்மேக்கர்” சசிகுமார் இயக்கியிருந்தார். கவியூர் சிவராமன் பிள்ளையின் கதையைத் தழுவி, பி.எம். நாயர் திரைக்கதை எழுதியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால், இப்படம் நிஜக் குற்றச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியின் பெயரையே படத்துக்குத் தலைப்பாக வைத்திருந்தனர். அந்தக் கேரக்டரில் நடிகர் ரவீந்திரன் நடிக்க, மோகன்லால், இப்படத்தில் மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ரவிகுமார், கே.பி. உம்மர், பஹதூர், ஆலுமூடன் மற்றும் ஷீலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ‘மதராசிலே மோன்’ ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது, மேலும் வளரும் நட்சத்திரமாக இருந்த மோகன்லாலை, திரையுலகின் நம்பிக்கைக்குரிய திறமையாளராக உறுதிப்படுத்தியது. இயக்குநராக சசிகுமாரின் பெயர் ஒருபுறம் இருக்க, இந்தப் படம் 1980களின் தொடக்கத்தில் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கரிக்கன் வில்லா இரட்டைக் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டதுதான், பார்வையாளர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்க முக்கியக் காரணமாக இருந்தது.கரிக்கன் வில்லா வழக்கு1980 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி இரவு, பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லாவில் அமைந்திருந்த ‘கரிக்கன் வில்லா’வில், 63 வயதான கே.சி. ஜார்ஜ் மற்றும் 56 வயதான ரேச்சல் என்ற தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். குழந்தையற்ற, வசதியான இந்தத் தம்பதியினர், பல வருடங்கள் குவைத்தில் பணிபுரிந்த பிறகு திருவல்லாவில் குடியேறியிருந்தனர். அவர்களின் உடல்களை அடுத்த நாள் காலையில் பணிப்பெண் கௌரி கண்டெடுத்தார். இருவரும் கத்தியால் குத்தப்பட்டிருந்தனர், ரேச்சலின் உடலில் கத்தி அப்படியே செருகப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணையில், ரேச்சலின் நகைகள், ஜார்ஜின் ரோலக்ஸ் வாட்ச், ஒரு டேப் ரெக்கார்டர் மற்றும் கணிசமான அளவு ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. விசாரணையின் போது, வீட்டிற்குள் சிதறிக்கிடந்த இரத்தக்கறை படிந்த தாள்களில், புதிய காலணிகளின் மங்கலான அச்சுகளை அதிகாரிகள் கவனித்தனர். அப்போது, கௌரி கூறிய ஒரு திடுக்கிடும் தகவல் விசாரணையில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், குற்றவாளிகளை நோக்கி போலீசாரை இட்டுச் சென்றது.’மதராசிலே மோன்’ யார்?முந்தைய நாள் மாலை, தான் வேலை முடிந்து கிளம்பும்போது, நான்கு பேர் காரில் வந்ததாகவும், அவர்களைப் பார்த்த ரேச்சல், தேநீர் போட்டு வரச் சொன்னதாகவும், அவதே அவர்களுக்கு தேநீர் பரிமாறியதாகவும் கௌரி போலீசாரிடம் கூறினார். பிறகு, அவர் கௌரியிடம், வந்தவர் “மதராசிலே மோன்” என்று சொன்னார். (மலையாளத்தில் ‘மோன்’ என்றால் ‘மகன்’ என்று நேரடிப் பொருள், ஆனால் முதியவர்கள் இளையவர்களை பாசத்துடன் அழைப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.) இந்த துப்பு, ஜார்ஜின் உறவினரான, மதராஸில் (சென்னை) படித்துக் கொண்டிருந்த ரேனி ஜார்ஜ் என்பவரே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என்பதைத் தெளிவாக்கியது.ரேனி ஜார்ஜ், தனது நண்பர்களான — மொரீஷியஸைச் சேர்ந்த ஹசன் குலாம் முகமது, மலேசியாவைச் சேர்ந்த குணசேகரன், மற்றும் கென்யாவைச் சேர்ந்த கிப்ளோ டேனியல் ஆகியோரின் உதவியுடன் இந்தக் குற்றத்தைச் செய்ததை காவல்துறை விரைவில் கண்டறிந்தது. இவர்கள் நால்வரும் சென்னையில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தனர், மேலும் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள்.தங்கள் பழக்கங்களுக்குப் பண உதவி செய்வதற்காக அவர்கள் ஏற்கனவே சிறு திருட்டுகளில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் கொலை செய்து பணத்தைத் திருடுவதற்காக சென்னையில் இருந்து திருவல்லாவுக்கு கார் ஓட்டி வந்துள்ளனர். சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அயல்நாட்டு காலணிகளின் அச்சுகளும், குற்றவாளிகளின் ஈடுபாட்டை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. அதிகாரிகள் பின்னர் ரேனியின் வீட்டிலிருந்து அந்த காலணிகளைக் கைப்பற்றினர். அவை விலை உயர்ந்தவை என்பதால் அவன் அவற்றைத் தன்வசம் வைத்திருந்தான்.’மதராசிலே மோன்’ தயாரிப்பாளரை மிரட்டிப் பணம் பறித்தல்4 குற்றவாளிகளுக்கும் கோட்டயம் அமர்வு நீதிமன்றம் 1982 இல் ஆயுள் தண்டனை விதித்தது. அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும், 1983 இல் உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. சிறையில் இருந்த ஆரம்ப ஆண்டுகளில், ரேனி தனது செயலுக்கு வருத்தம் காட்டவில்லை. சிறைக்குள்ளேயும் போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பரோலில் வெளிவந்தபோது, அவர் ‘மதராசிலே மோன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 60,000 பறித்துள்ளார். எவ்வாறாயினும், ரேனி படிப்படியாக மனமாற்றம் அடைந்தார். அவரது சிறைவாசம் ஜூன் 1995 இல் முடிவடைந்தது. குலாம், குணசேகரன் மற்றும் கிப்ளோ ஆகியோர் தங்கள் தாய் நாடுகளுக்குத் திரும்ப, ரேனி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பரோலின் போது திருமணம் செய்து கொண்ட அவர், கேரளா மற்றும் கர்நாடகாவில் சிறையில் இருக்கும் கைதிகளின் குழந்தைகளுக்காக பெங்களூரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை (NGO) நிறுவினார். அவர் இப்போது தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.தன் வாக்குமூலத்துக்காக ஒருநாள் ரேனி திரும்பி வந்து பழிவாங்குவார் என்று கௌரி பயத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் இறுதியில் சந்தித்தபோது, ரேனி அவளது பிரியமான எஜமானியைக் கொன்றதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டார். மேலும், தனது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டி, அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டாராம். கௌரி 2020 ஜூலை மாதம், 98 வயதில் காலமானார்.ஒரு பேட்டியில், நடிகர் ரவீந்திரன், ரேனி கொலை செய்வதற்கு முன்பு நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பர்களாக இருந்ததாக வெளிப்படுத்தினார். “நாங்கள் ஒன்றாக வசித்தோம். சம்பவம் நடப்பதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, எனக்கும் அவனுக்கும் சண்டை ஏற்பட்டது. நான் எப்போதும் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன், அந்த நேரமும் அப்படித்தான். இனிமேல் நாம் ஒன்றாக இருக்க முடியாது என்று அவனிடம் சொன்னேன். அவன் போதைப்பொருள், இரசாயனப் பொருட்கள் மற்றும் திருட்டில் ஈடுபட்டிருந்தான். ‘வேண்டாம்! நீ இங்கே இருக்க முடியாது’ என்று சொல்லி அவனை வெளியே துரத்திவிட்டேன்,” என்று பகிர்ந்து கொண்டார்.