இலங்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு !
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு !
2025 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.