இலங்கை

சீதை அம்மன் ஆலயத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

Published

on

சீதை அம்மன் ஆலயத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திலுள்ள 6 உண்டியல்கள் நேற்றிரவு (01) உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், நுவரெலிய பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இதன்படி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஆலயத்தில் உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தில் பிரதான காரியாலயத்திலிருந்த சி.சி.டி.வி. கெமராவின் முழு இணைப்பையும் துண்டித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் காவல்துறையினர் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

Advertisement

மேலும் ஆலயத்தின் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கெமராக்களை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version