டி.வி
சொன்னதை அப்படியே கிழித்து காட்டிய பிரஜின், சாண்ட்ரா.! அதிர்ச்சியின் உச்சத்தில் ஹவுஸ்மேட்ஸ்
சொன்னதை அப்படியே கிழித்து காட்டிய பிரஜின், சாண்ட்ரா.! அதிர்ச்சியின் உச்சத்தில் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் ஒன்பதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் நான்கு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிய வெளியே சென்றுள்ளனர். அதை ஈடு செய்யும் வகையில் நேற்றைய தினம் திவ்யா கணேஷ், சாண்ட்ரா ஏமி, அமித் பார்கவ், பிரஜின் என்று நான்கு பேர் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே சென்றுள்ளனர். இவர்கள் உள்ளே சென்ற ப்ரோமோவில், நான் அங்கே போனதும் கிழி கிழினு கிழிப்பேன் என்று பிரஜின் சொல்ல, நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவேன் என்று அமித் சொல்லிச் சென்றார். இந்த நிலையில், பிக் பாஸ் 9வது சீசன் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரஜின் சொன்ன மாதிரியே உள்ளே சென்று கிழித்துள்ளார். அதன்படி உள்ளே சென்ற பிரஜின் ஜோடி, ஹவுஸ்மேட்ஸை ஒரு இடத்தில் அமர வைத்து அனைவரிடமும் பேப்பர், பேனாவை கொடுத்து இந்த சீசனுக்கு எதுக்கு வந்தீங்க என்று கேட்கின்றனர்.அதற்கு இதெல்லாம் ஒரு கேள்வியா என்று நினைத்த பார்வதி முதலில் பதிலை எழுதி வாசித்தார். அதில் நான் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கும், ரியலாக இருப்பதற்கும் தான் உள்ளே வந்தேன் என்று பாரு சொல்லுகின்றார். இதைக் கேட்ட சாண்ட்ரா, இப்ப நீங்க இருப்பது தான் ரியலானு? கேட்டு அவர் எழுதிய பேப்பரை கிழித்து தூக்கிப் போட்டார். இதைப் பார்த்த பார்வதிக்கு அதிர்ச்சியானது. அதன் பின்பு இந்த ஒரு மாசத்துல நீங்க என்ன செஞ்சீங்க? என்ன கேம் விளையாடி இருக்கீங்க? என்று கம்ரூதினை கேட்க, அவர் தலை குனிந்து நிற்கின்றார். இதனால் அந்த பேப்பரையும் பிரஜின் கிழிக்கின்றார். இதை தொடர்ந்து அரோரா, உங்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கும்.. எனக்கு ஒரு கேரக்டர் இருக்கும் என்று பேச ஆரம்பிக்க, ஆமாம் என்று பிரஜின் ஒரு டோனில் சொல்கின்றார். மீண்டும் உங்களுக்கு ஒரு ஸ்ட்ராடஜி இருக்கும், எனக்கு ஒரு ஸ்ட்ராடஜி இருக்கும் என்று அரோரா தொடர, அவரின் பேப்பரை கிழித்துப் போட்டார் பிரஜின்.இறுதியில் இதை பார்த்து கோவப்பட்ட அரோரா இது ரொம்ப ரூட் என்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.