சினிமா
தக்காளி சட்னியை கைவிடாத லோகி.. வாமிகா கபி கையில் என்னனு பாருங்க.! DC பட டைட்டில் டீசர்
தக்காளி சட்னியை கைவிடாத லோகி.. வாமிகா கபி கையில் என்னனு பாருங்க.! DC பட டைட்டில் டீசர்
தமிழ் சினிமாவில் சக்சஸ் ஃபுல் இயக்குநராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியாகி வசூலில் வெற்றி பெற்றது. இதுவரை இயக்குநராக இருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் DC படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகின்றார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே லோகேஷ் – ஸ்ருதி ஹாசன் உடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC படத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்தில் வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த நிலையில், DC படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. அதில் கையில் கத்தியுடன் காணப்படும் லோகேஷ் கனகராஜ், ரத்தத்தில் நனைந்து காணப்படுகின்றார். இன்னொரு பக்கம் இந்த படத்தின் ஹீரோயின் வாமிகா கபி கையில் காண்டத்தோடு காணப்படுகின்றார். அதன் பின்பு இருவரும் ஒரு ரூமில் சந்திக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் தனது முதல் படத்திலேயே இப்படி ரத்தம் தெறிக்க லோகேஷ் நடந்திருக்கின்றாரே இதனால் இந்த படத்தில் வன்முறை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.மேலும் இந்த படத்தின் டீசரை பார்த்த ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல, ‘தக்காளி சட்டினி மட்டும் கைவிடவே மாட்டேன்’ என்று லோகேஷ் கனகராஜை பங்கம் செய்து பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.