இலங்கை

நடுவீதியில் துடிதுடித்து பலியான பல்கலை மாணவன் ; நொடிப்பொழுதில் நடந்தேறிய பெரும் துயர்

Published

on

நடுவீதியில் துடிதுடித்து பலியான பல்கலை மாணவன் ; நொடிப்பொழுதில் நடந்தேறிய பெரும் துயர்

மதுகம-நேபொட-ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் நேற்று (01) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மினிபாய, தவலம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

மதுகமவிலிருந்து ஹொரணை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், ஹிரிகெட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி,  தனியார் பேருந்துடன்  மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மதுகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version