இலங்கை
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஐவர் கைது
தீர்வை வரியின்றி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 5 பேர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக காலியில் இன்று (11) மாலை நடத்தப்பட்ட விசேட தேடுதலின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
95 மூட்டைகளில் சுமார் 19,000 சிகரெட்டுகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூபாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் போத்தல் மற்றும் மிலிதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.