இலங்கை
நீதித்துறையில் 20 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்
நீதித்துறையில் 20 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்
மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.
நீதித்துறை சேவையில் உள்ளவர்களுக்கு எதிராக பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகளைத் தொடர்ந்தே, இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில், மேல் நீதிமன்றத்தில் தற்போது பத்து வெற்றிடங்கள் உள்ளன,
அதே நேரத்தில் நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 60 வெற்றிடங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.