சினிமா
பல பெண்கள் செய்யும் தவறு.. ராஷ்மிகாவின் முதல் காதல் தோல்வி அடைந்தது இதற்காகவா?
பல பெண்கள் செய்யும் தவறு.. ராஷ்மிகாவின் முதல் காதல் தோல்வி அடைந்தது இதற்காகவா?
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார்.இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” சில பெண்கள் தங்களுக்கு விருப்பமில்லாத போதிலும், சுற்றியுள்ள சமூகத்திற்காக சில உறவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அந்த நபருடன் கமிட் ஆகி இருக்க மாட்டார்கள்.அந்தப் பெண் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் அந்த உறவில் இருந்து விலகினால் அப்போது அந்த நபருக்கு அது அதிர்ச்சியாக இருக்கும்.ஆனால் பல பெண்கள் இது போன்ற பிடிக்காத உறவுகளில் இருந்து வெளி வருவது இல்லை. அவர்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வெளிவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.