இலங்கை

மூளையை உண்ணும் அமீபா ; ஆறு, ஏரி, குளங்களில் காத்திருக்கும் ஆபத்து

Published

on

மூளையை உண்ணும் அமீபா ; ஆறு, ஏரி, குளங்களில் காத்திருக்கும் ஆபத்து

 மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும்.

இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும்.

Advertisement

அங்கு மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும்.

அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும்.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.

Advertisement

மூளையை உண்ணும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.

அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் கொண்டது.

உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

Advertisement

தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version