இலங்கை

யாழில் சட்டவிரோத மணற்கடத்தல் முறியடிப்பு

Published

on

யாழில் சட்டவிரோத மணற்கடத்தல் முறியடிப்பு

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த பட்டா ரக வாகனத்தை இன்று காலை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வடமராட்சி குடத்தனைப் பகுதியில் பட்டா ரக வாகனமொன்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிய பின்னர் வரணி மாசேரி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனத்தை மாசேரி பகுதியில் கொடிகாமம் பொலிஸார் இடைமறித்துள்ளனர்.

Advertisement

எனினும் குறித்த பட்டாரக வாகனம் பொலிஸாரை மோதும் வகையில் பயணித்து தப்பியோடியுள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் பட்டாரக வாகனத்தை துரத்திச் சென்று பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் கறுக்காய்த்தீவுப் பகுதியில் வைத்து முள்ளுக் கட்டையை வீதியின் குறுக்காக போட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன் போது இலக்கத் தகடுகளற்ற கப் ரக வாகனத்தை கைவிட்டு கடத்தற்காறர்கள் ஆறுவர் தப்பித்தோடியுள்ளனர்.

Advertisement

சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை இலக்கத் தகடுகளற்ற கப் ரக வாகனத்துடன் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version