சினிமா
ரெட் கார்ட் விஷயம் பற்றி முதல் முறையாக பேசிய பிரதீப் ஆண்டனி! கமல் பற்றியும் ஓபன் டாக்
ரெட் கார்ட் விஷயம் பற்றி முதல் முறையாக பேசிய பிரதீப் ஆண்டனி! கமல் பற்றியும் ஓபன் டாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த சீசனில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினர்.ஆரம்பத்திலேயே பிரதீப் ஆண்டனிக்கு அமோக ஆதரவு ரசிகர்கள் கொடுத்தார்கள். இதனால் ரெட் கார்ட் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதீப் மீது வீண் பழி சுமத்தப்பட்டு வேண்டுமென்றே பிளான் போட்டு அவரை பெண் போட்டியாளர்கள் வெளியே அனுப்பினார்கள். கமலஹாசன் கூட சரியாக விசாரிக்காமல் பிரதீப் மீதுதான் தவறு என்று ரெட் கார்ட்டை காட்டினார் என்று ரசிகர்கள் புலம்பினர். தன்னை கண்டித்து கொடுக்கப்பட்ட ரெட் கார்ட்டை வீட்டிற்கு வந்து சக பெண் தோழிகளுடன் சேர்ந்து கொண்டாடினார் பிரதீப். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலானது. அதன் பின்பு கமலஹாசன் தொடர்பிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.அந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த சக போட்டியாளர்கள் பிரதீப் பற்றி நல்ல விதமாகவே பேட்டி கொடுத்தனர். இதனால் பிரதீப் மீண்டும் பிக் பாஸ் செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரெட் கார்ட் விடயம் தொடர்பில் மனம் திறந்து பேசி உள்ளார் பிரதீப் ஆண்டனி. அதன்படி அந்த சீசனில் கலந்து கொண்ட விசித்ராவிடம் பிரதீப் ஆண்டனி பேசினார். இதன்போது ரெட் கார்ட் கொடுத்த பிறகு அதை எப்படி சமாளித்தீர்கள் என்று விசித்திரா கேட்க, அதற்கு பிரதீப் கூறுகையில் , அந்த நேரத்தில் அது ஒரு மோசமான நிலைமையாக தான் இருந்தது. ஆனால் நல்ல வேலையாக நான் வெளியே வந்த பிறகு ஃபீல் பண்ண வேண்டிய நிலைமை வரவில்லை. எனக்காக நிறைய பேர் ஃபீல் செய்து கொண்டிருந்தார்கள். நிறைய பேர் அழுதும் உள்ளார்கள். இதனால் என்ன நடந்தது என்பது பற்றி நான் யாரிடமும் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. நான் நல்லவன் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது என்பதை தெரிந்து எனக்கு சந்தோசமாக இருந்தது. மேலும் எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது என்று தான் எனக்கு வருத்தமா இருந்துச்சு என்றார். இதன்போது அவருடன் இருந்த சுரேஷ் தாத்தா, கமல் சார் எங்கே ரெட் கார்ட் கொடுத்தார்? அவர் கார்ட்டை வைக்க மத்தவங்க தான் கொடுத்தாங்க என்று கூறினார். தற்போது பிரதீப் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.