சினிமா

விஜய் Pan-World Star.. ஆனா அஜித்துக்கு தமிழ்நாட்டை தாண்டினா மார்க்கெட் இல்ல

Published

on

விஜய் Pan-World Star.. ஆனா அஜித்துக்கு தமிழ்நாட்டை தாண்டினா மார்க்கெட் இல்ல

கரூரில்  நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்டம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இதன்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய்  சினிமாவில் இருந்து விலகி அரசியலில்  பயணிக்க உள்ளார்.  2026 ஆம் ஆண்டு தேர்தலை மையமாகக் கொண்டு இவர்களுடைய  செயற்திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதன்போதே கரூரில்  தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது   கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு கறுப்பு புள்ளியாக அமைந்தது. இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இது விஜய்க்கு  எதிராகவும் திரும்பியது .  இந்த சம்பவம் நடந்து ஒரு மாதங்கள் கழித்து  நடிகர் அஜித்குமார்  கொடுத்த பேட்டியில் கரூர் சம்பவம் தொடர்பிலும்  மனம் திறந்து பேசி இருந்தார். தற்போது அவர் அளித்த பேட்டிகள் வைரல் ஆகியுள்ளன.இந்த நிலையில்,  நடிகர் அஜித் குமார் பற்றி  பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,  விஜய்னுடைய போட்டியாளராக அஜித் இருந்தார்.  விஜய் என்பவர் இருந்ததனால தான் அஜித்துக்கு போட்டி இருந்தது.  விஜய் அரசியலுக்கு போனதால் அஜித்தை வைத்து படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். விஜய்க்கு உள்ள ரசிகர் பங்கில் மூன்றில் ஒரு பகுதி தான் அஜித்துக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.  விஜயை பான் இந்திய ஸ்டார் என்று சொல்ல முடியும்.  ஆனால் அஜித்துக்கு தமிழ்நாட்டை தாண்டினால் எங்கேயும் மார்க்கெட் கிடையாது.  கேரளா,  கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில்  விஜயின் படங்களுக்கு அமோக வரவேற்பு இருக்கின்றது. ஆனால் அஜித்திற்கு வேல்யூவே இல்லை. குட் பேட் அக்லி படம்  அஜித்தின் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக எடுத்த படம்.  அந்தப் படத்தை தயாரித்த மைத்ரி மூவிக்கு  கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் நஷ்டம்.  எனவே விஜய் அளவுக்கு இவருக்கு ஒரு ஃபேன் போலோவிங் இருந்திருந்தால் இந்த படம் ஓடி இருக்கணும். மிஞ்சி மிஞ்சி போனா இரண்டு நாள் அல்லது மூன்று நாள் தான் அலப்பறை பண்ணுவாங்க. அதற்கு மேல தியேட்டர் காத்து வாங்கும் என அஜித் பற்றி கூறியுள்ளார்  பிஸ்மி.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version