பொழுதுபோக்கு

18 கோடி பட்ஜெட், 1.25 கோடி க்ளைமேக்ஸ்; அசால்ட்டாக தூக்கிப் போட்ட லிங்குசாமி: பையா க்ளைமேக்ஸ் இது இல்லையா?

Published

on

18 கோடி பட்ஜெட், 1.25 கோடி க்ளைமேக்ஸ்; அசால்ட்டாக தூக்கிப் போட்ட லிங்குசாமி: பையா க்ளைமேக்ஸ் இது இல்லையா?

தமிழ் சினிமாவில் இன்றைக்கும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் உள்ள லிங்குசாமி, இயக்கத்தில் உருவான பையா படத்தில், கோடி ரூபாய் மதிப்பில் க்ளைமேக்ஸ் காட்சியை படமாக்கிவிட்டு, அதன்பிறகு அந்த காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டு மற்றொரு காட்சியை படமாக்கி படத்தில் சேர்த்துள்ளார். மம்முட்டி, முரளி, அப்பாஸ், சினேகா, தேவயானி நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு மாதவன் நடிப்பில் ரன், அஜித் நடிப்பில் ஜி, விஷால் நடிப்பில் சண்டக்கோழி, விக்ரம் நடிப்பில் பீமா ஆகிய படங்களை இயக்கிய இவர், 5-வது படமாக பையா படத்தை இயக்கினார். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களை முடித்த கார்த்தி நடிப்பில் வெளியான 3-வது படமான இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருந்தார்.மேலும் மெலிந்த் சோமன், ஜெகன், சோனியா தீப்தி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் இன்றும் கேட்கும் வகையில், பெரிய ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது. ஒரு பெண்ணை பார்த்து அவளை காதலிக்கும் நாயகன், அவளுக்கு ஒரு பிரச்னை என்று வரும்போது, அவளை, பெங்களூரில் இருந்து பம்பாய் வரை காரில் அழைத்து செல்லும்போது நடக்கும் சுவாரஸ்யமாக சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. இடையில் காதல், ஆக்ஷன் என கமர்ஷியல் அம்சங்கள் இருந்தது.இந்த படம் வெளியானபோது கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றி என்று சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கூறியிருந்தனர். இந்த படத்தில் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த தமன்னாவை அவரது அம்மா குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளாத நிலையில், மீண்டும் அவரை தனது காரில் அழைத்துக்கொண்டு வந்துவிடுவார் கார்த்தி. அப்போது கார்த்தியின் நண்பர்கள், தமன்னாவை அவர் காதலிப்பதாக சொல்வார்கள். இதை கேட்டு தமன்னாவும் தனது காதலை வெளிப்படுத்திவிடுவார். இதுதான் இப்போது இருக்கும் பையா படத்தின் க்ளைமேக்ஸ். A post shared by Wow Tamizhaa (@wowtamofficial)18 கோடி செலவில் தயாரான இந்த படத்திற்காக, இந்த க்ளைமேக்ஸ்க்கு முன்பு ஒன்னேகால் கோடி செலவில் வேறொரு க்ளைமேக்ஸ் காட்சியை ஷூட் செய்து படத்தில் வைத்துள்ளார். இந்த படத்தை பார்த்த இயக்குனர் சசி உள்ளிட்ட சில இயக்குனர்கள், நாயகியை அந்த வீட்டில் சேர்த்துக்கொண்டிருந்தால், அவர் மீண்டும நாயகனுடன் இணைந்திருப்பாரா என்று கேட்டுள்ளனர். இதை ஒப்புக்கொண்ட லிங்குசாமி, இந்த ஒன்னேகால் கோடி க்ளைமேக்ஸை அப்படியே தூக்கிபோட்டுவிட்டு, உடனடியாக மற்றொரு க்ளைமேக்ஸ் காட்சியை படமாக்கியுள்ளார். இதுதான் இப்போது நாம் பார்க்கும் காட்சி என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version