விளையாட்டு
IND vs AUS LIVE Score, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி – பவுலிங்கை தேர்வு செய்தது
IND vs AUS LIVE Score, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி – பவுலிங்கை தேர்வு செய்தது
India vs Australia 3rd T20I: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்த்தில் பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா திணறி வருகிறது. தொடரில் இன்னும் 3 போட்டிகளே மீதம் இருக்கும் சூழலில் இந்தியா முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட்,சீன் அபோட்,சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ்,மேத்யூ குஹ்னெமன் இந்திய அணி: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே,அக்சர் படேல்,வாஷிங்டன் சுந்தர்,அர்ஷ்தீப் சிங்,வருண் சகரவர்த்தி,ஜஸ்பிரித் பும்ரா