இலங்கை

ஆயுர்வேத மருத்துவ சேவை தொடர்பில் நாளை புதிய நியமனங்கள்!

Published

on

ஆயுர்வேத மருத்துவ சேவை தொடர்பில் நாளை புதிய நியமனங்கள்!

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன், சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள்  உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை 03ஆம் திகதி வழங்கப்படவுள்ளன. 

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நியமன நிகழ்வு நடைபெறவுள்ளது.  கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத் துறையில் ஒரே நேரத்தில் அதிகளவான மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்படும் சந்தர்ப்பம் இதுவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

Advertisement

இலங்கையின் ஆயுர்வேத சேவையினை மேம்படுத்துவதற்கும், தரமான நோயாளர் பராமரிப்புச் சேவையை வழங்குவதற்கும், இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள ஆரம்ப நிலை மருத்துவ அதிகாரிப் பதவி வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டும், சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர், மருத்துவர்  நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆயுர்வேத திணைக்களம் முன்னெடுத்துள்ளது. 

 அதற்கமைய புதிய மருத்துவ அதிகாரிகள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சில உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version