வணிகம்
இ.பி.எஃப்.ஓ ஊழியர் சேர்க்கை திட்டம் 2025 அறிமுகம்: யார் விண்ணப்பிக்கலாம்? நன்மை என்ன?
இ.பி.எஃப்.ஓ ஊழியர் சேர்க்கை திட்டம் 2025 அறிமுகம்: யார் விண்ணப்பிக்கலாம்? நன்மை என்ன?
அனைத்துத் தகுதியுள்ள ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கவரேஜை விரிவுபடுத்துவதையும், நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து விதிகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் வகையில், ஊழியர் பதிவுத் திட்டம் 2025 (Employees’ Enrolment Scheme 2025) என்ற திட்டத்தை அரசு சனிக்கிழமை அன்று அறிமுகப்படுத்தியது.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் திட்டம் நிறுவனங்களுக்கு ஒரு சிறப்புச் சாளரத்தை (Special Window) வழங்குகிறது. இதன் மூலம், ஜூலை 1, 2017க்கும் அக்டோபர் 31, 2025க்கும் இடைப்பட்ட காலத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கவரேஜில் இருந்து விடுபட்ட தகுதியுள்ள ஊழியர்களை, நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து பதிவு செய்யவும், அவர்களின் கடந்தகால இணக்கத்தை முறைப்படுத்தவும் முடியும்.விடுபட்ட ஊழியர்களைப் பதிவு செய்வதற்கான இந்தச் சாளரம், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை (ஆறு மாதங்களுக்கு) திறந்திருக்கும்.திட்டத்தின் முக்கிய அம்சங்கள்அனைத்து நிறுவனங்களும் (அவை ஏற்கனவே EPF கவரேஜில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்), ஜூலை 1, 2017க்கும் அக்டோபர் 31க்கும் இடையில் பணியில் சேர்ந்த ஊழியர்களை இ.பி.எஃப்.ஓ. போர்ட்டல் மூலம் அறிவிக்கலாம்.கடந்த காலத்தில் விடுபட்ட ஊழியர்களுக்காக, ஊழியரின் பங்களிப்பு (Employee’s Share) தள்ளுபடி செய்யப்படுகிறது! (ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் தவிர).ஒவ்வொரு நிறுவனத்திற்கும், அனைத்து மூன்று இ.பி.எஃப். திட்டங்களிலும் (இ.பி.எஃப், ஓய்வூதியத் திட்டம், வைப்புத் தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீடு) இணக்கத்தைக் கருத்தில் கொண்டு, மொத்தமாக ரூ. 100/- மட்டுமே அபராதமாக விதிக்கப்படும். இது மிகமிகக் குறைவான தொகை!நிறுவனம் செய்ய வேண்டியது எல்லாம், விடுபட்ட காலத்திற்கான நிறுவனத்தின் பங்கையும் (Employer’s Share) மற்றும் நிர்வாகச் செலவுகளையும் மட்டும் செலுத்துவதுதான்.உங்கள் கவனத்துக்கு…இ.பி.எஃப். என்பது வெறும் சேமிப்பு அல்ல. இது ஓய்வூதியம், காப்பீடு மற்றும் அவசரகால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்புக் குடை!நீங்கள் ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தால், இந்தச் சாளரத்தைப் பயன்படுத்தி, உங்கள் ஊழியர்களின் உழைப்புக்குரிய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து, சட்ட ரீதியான பிரச்சினைகளில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் ஒரு ஊழியராக இருந்தால், உங்கள் நிறுவனம் உங்களை இந்தத் திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் சேர இதுவே சரியான நேரம்! இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!