பொழுதுபோக்கு
உங்க யாரையும் ஆடியன்ஸுக்கு பிடிக்கல… நீங்க ஃபேவரைட் போட்டியாளர் இல்ல; உண்மையை உடைத்த அமித்
உங்க யாரையும் ஆடியன்ஸுக்கு பிடிக்கல… நீங்க ஃபேவரைட் போட்டியாளர் இல்ல; உண்மையை உடைத்த அமித்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிப்பராகி வருகிறது. முந்தைய சீசன்களில் திரைப்பிரபலங்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன்பின்னர் திரைப்பிரபலங்களுடன் சமூக வலைதள பிரபலங்களும் பங்கெடுத்தனர். தற்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் முழுவதும் சமூக வலைதள பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியாளர்கள் பட்டியல் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.பிக்பாஸ் வீடு என்றாலே போட்டிகளும், பிரச்சனைகளும் இருக்கத் தான் செய்யும். ஆனால், தற்போதைய சீசனில் மக்களே ‘அட நிறுத்துங்கடா’ என்று சொல்லும் அளவிற்கு பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தன. ஒவ்வொரு நாளும் பிரச்சனை என்றே பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. இது பார்ப்பவர்களையும் வெறுப்படைய செய்தது. மேலும், வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் ரேட்டிங்கும் கீழே சென்றதாக தகவல் வெளியானது.பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். களையிழந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கும் விதமாக வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுள்ளது பிக்பாஸ். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் 50 அல்லது 60 நாட்களுக்கு மேல் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எல்லாம் வொர்த் இல்லை என்று தெரிந்த பிக்பாஸ் 30 நாட்களுக்கு முன்பே வைல்டு கார்டு போட்டியாளர்களை களத்தில் இறக்கியிருப்பதாக கூறப்படுகிறது.பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் போட்டியாளர்களை நல்லா வாங்கு வாங்கு என்று வாங்கினர். இனி பிக்பாஸ் வீட்டில் என்னென்ன திருப்பங்கள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.Amit, yaru man nee.. point pointa vekuringa 🔥#BiggBossTamil9#biggbosstamilpic.twitter.com/88O9JLt9JTஅதில், அமித், பிரஜின், துஷார், திவாகர் என அனைவரும் கார்டன் ஏரியாவில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது துஷார் லக்கில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு தானே? என்று கேட்கிறார். அதற்கு அமித் லக் என்றாலே கெட்டது தான். ஆடியன்ஸுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் யாரையும் பிடிக்கல. பொதுவாக 30 நாட்களில் இவங்கதான் என் ஃபேவரைட் போட்டியாளர் என ஆடியன்ஸ் தீர்மானித்துவிடுவார்கள். ஆனால் நீங்கள் யாருமே அதை செய்யவில்லை என்று உண்மையை உடைத்துவிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.