இலங்கை

உயிர் அச்சுறுத்தல்; பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்?

Published

on

உயிர் அச்சுறுத்தல்; பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்?

   பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் , தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு எதிராக பாதாளக் குழுவொன்று சதித்திட்டம் தீட்டுவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரு அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு, ஞானசார தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தமது விஹாரைக்கு வருகை தந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் வழங்கியதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தாம் தற்போது கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் நாட்டில் நீண்டகாலமாக உருவாகியுள்ள உலகளாவிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய வன்முறைகள் குறித்து நான் பல்வேறு வெளிப்படுத்தல்கள் செய்துள்ளேன் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version