பொழுதுபோக்கு
ஒரு பாட்டு, திரும்ப, திரும்ப கேக்கணும்; இயக்குனர் சொன்னதை கேட்டு இளையராஜா போட்ட பாடல்: இப்போதும் மெகா ஹிட்!
ஒரு பாட்டு, திரும்ப, திரும்ப கேக்கணும்; இயக்குனர் சொன்னதை கேட்டு இளையராஜா போட்ட பாடல்: இப்போதும் மெகா ஹிட்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் 80-களில் இருந்து தற்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவரும் ரசித்து மகிழும் படியான பாடல்களை எழுதி வருகிறார். இசைக்கு தன்னை முழுமையாக அர்பணித்த இளையராஜா ‘சிம்பொனி’ இசையும் இயற்றி யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார்.இளையராஜாவுடன் ஒரு படம் பண்ணிவிட மாட்டோமா என்ற ஆசையில் பல இயக்குநர்கள் இன்றும் இளையராஜா வீட்டை சுற்றி வருகின்றனர். இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என பலரும் கூறுவார்கள். இசைக்காக தன்னையை அர்ப்பணித்தவருக்கு கொஞ்சம் தலைக்கனம் இருப்பதில் தப்பு இல்லையே என்பது ரசிகர்களின் கருத்து. பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் டியூனையை மாற்றி வேறு படத்தில் பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது.இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலையும் மாற்றி தன் படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா சகோதரர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார். இளையராஜாவின் பாடல்கள் இன்று வரையும் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக உள்ளது. சோகமோ, சந்தோஷமோ எந்த சூழ்நிலையிலும் கேட்கும் பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்துள்ளார்.இந்நிலையில், ஒரு பாடலை திரும்ப… திரும்ப கேட்கணும் என்று இயக்குநர் அமீர்ஜான் சொன்னதை கேட்டு இளையராஜா பாடல் ஒன்றை கம்போஸ் செய்தார். அதாவது இயக்குநர் அமீர்ஜான் தான் இயக்கிய ‘தர்ம பத்தினி’ திரைப்படத்தில் திரும்ப… திரும்ப கேட்கத் தூண்டும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது தான் இளையராஜா ‘நான் தேடும் செவ்வந்தி பூ இது’ என்ற பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்த பாடலை கண்மணி சுப்பு எழுதியிருந்தார். இந்த பாடல் இன்று வரையிலும் ரசிகர்கள் விரும்பும் பாடலாக உள்ளது.இந்த படம் வெளியான போது ரசிகர்கள் காதல் தேசத்திற்கு உங்களை வரவேற்கிறோம் என்று பெயிண்டிங் எல்லாம் வைத்துள்ளார்கள். இயக்குநர் அமீர்ஜான், பாலசந்தரின் உதவியாளராக இருந்துள்ளார். இவர் பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை, சிவா, தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.